Tuesday, October 27, 2009

சிரமம் இல்லா சமையல்

சிரமம் இல்லா சமையல்


வெங்காயம் தக்காளி மசாலா
தேவையான பொருட்கள்
தக்காளி - மூன்று
வெங்காயம் - மூன்று
கரம் மசாலா - 1 tea spoon

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி கடுகு போட்டு.
கடுகு பொரிந்தவுடன் கறிவேப்பிலையை போட்டு simmer இல் வைக்கவும்.
பொடியாக அறிந்த வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்பு தக்காளியை போட்டு வதக்கி உப்பு, மஞ்சள் தூள் போடு வதக்கவும்.
அடுப்பை simmer-இல் வைத்து 1 tea spoon கரம் மசாலா போட்டு 1 glass தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் அடுப்பை sim-இல் வைத்து தண்ணீர் சுண்டியவுடன் இறக்கிவிடவும்.

ரவா அப்பம்
தேவையான பொருட்கள்
ரவா இரண்டு கப்
முட்டை இரண்டு
சர்க்கரை இரண்டு கப்

முதலில் இரண்டு கப் ரவாவை தண்ணீர் விட்டு பிசைந்துகொள்ளவும். சப்பாத்தி மாவு பதத்துக்கு வந்தவுடன் அப்படியே வைத்துவிடவும்.
௧ மணி நேரம் கழித்து இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி சர்க்கரை இரண்டு கப் போட்டு தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸ்யில் போட்டு அடித்து எடுக்கவும். குழி பனியர சட்டியை அடுப்பில் வைத்து என்னை விட்டு ஊற்றி எடுக்கவும். மாலை வேலை Tiffin-க்கு ஏற்றது.

Thursday, October 22, 2009

நான் ரசித்த படங்கள்

Saving Private Ryan (1998)
Opening scene-இல்.... இரண்டாம் உலக போரில் பங்கேற்ற ஒரு தாத்தா தன் சக வீரர்களின் கல்லறையில் நின்று கண்ணீரோடு நினைத்துப்பார்க்கிறார்(Flashback).

மிரட்டலான அந்த Flashback.... June 6, 1944, ஹிட்லரின் ஆக்கிரமிப்பில் இருக்கும் பிரான்ஸ் நாட்டின் Omaha Beach இல் அமெரிக்க படைகள் இறங்குகிறது.
கடற்கரையில் இறக்கிவிடப்பட்ட படையினர் ஜெர்மன் நாஜி படையினரின் இயந்திரதுப்பாக்கி தோட்டாக்களுக்கு இரையாவது bloody scenes!. கடல் நீர் சிகப்பாய் அலை அடிக்கிறது. கேப்டன் John Millerன் (Tom Hanks) 2nd Ranger Battalion பிரிவு நிறைய இழப்புகளையும் மீறி முன்னேறுகிறது. இதோ கண்முன்னே மரணம் என்று இருக்கும் நிலையில் ஒவ்வொருவரின் முகத்திலும் பயம், பீதி, ஆற்றாமை, கோபம் என்று பல Expressions !
ஒரு வழியாக Miller-இன் படைகள் கடற்கரை பகுதியை ஊடுருவி வருகிறார்கள்.

அதே நேரம் அமெரிக்காவில் உள்ள இராணுவ தலைமையகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் போரில் இறந்துவிட்ட செய்தியை அவர்களின் தாயார் Mrs.Ryan க்கு அனுப்ப தயாராக இருக்கும் வேலையில், இராணுவ ஜெனரல் George C. Marshall, அந்த தாயின் துயரத்தை போக்க அவரது நான்காவது மகன் Private James Ryan-
போர் முனையில் இருந்து திரும்ப அழைத்து தாயிடம் சேர்க்க நினைக்கிறார்.

Private James Ryan- கண்டு பிடிக்கும் வேலையை Captain John Miller-ரிடம் அவரது Commander ஒப்படைக்கிறார்.

Hitler-இன் Nazi படையினரின் ஆக்கிரமிப்பு பகுதிகளை கடந்து Captain John Miller-இன் குழு James Ryan- தேடிசெல்கிரர்கள். இரண்டாம் உலகபோரில் கடுமையாக சேதம் அடைந்த நகரங்களை கடந்து செல்லும் போது ஆங்காங்கே thrill-லான துப்பாக்கி சண்டை நடக்கிறது.
கடைசியாக ஒரு முக்கியமான ஆற்றுப்பாலத்தை காவல் செய்யும் குழுவில் Private James Ryan இருப்பதை கண்டுபிடித்து, அவரின் மூன்று சகோதரர்கள் இறந்துவிட்டதாகவும் தலைமையகம் திரும்ப அழைத்து கொள்வதாகவும் இராணுவ். ஆனால் திடீர் திருப்பமாக Ryan அந்த இடத்தை விட்டு செல்ல மறுக்கிறார். German படைகள் அந்த ஆற்றுப்பாலத்தை கடக்க இருப்பதை கண்டறிந்து குறைந்த வீரர்களை வைத்துக்கொண்டு Capt. John Miller போரிடுகிறார். நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் Capt. John Miller மரணமடைய அமெரிக்க படைகள் மற்றும் Airforce வந்தடைகிறது.

படம் முழுவதும் வரும் துப்பாக்கி சத்தம் தத்ரூபமாக இருக்க, அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில் உள்ள machine gun range-இல் உண்மையான இரண்டாம் உலக போர் காலத்து துப்பாக்கிகளை வெடிக்க செய்து ஒலிபதிவு செய்திருக்கிறார்கள்.

Captain John Miller கதாபாத்திரத்தில் நடிக்க டைரக்டர் Steven Spielberg முதலில் Mel Gibson மற்றும் Harrison Ford- யோசித்து பின்பு Tom Hanks- நடிக்க வைத்திருக்கிறார்.

படத்தில் வரும் வித்தியாசமான மோட்டார் சைக்கிள் உணமையில் இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட Kettenkrad ("tracked motorcycle") ஆகும். கரடு முரடான பாதையில் சிறு பீரங்கி சிறு வாகனங்களை tow செய்ய பயன்படுத்தப்பட்டது.

Artistic ஆக தெரிய வேண்டும் என்பதற்காக படம் முழுவதும் டைரக்டர் Steven Spielberg, color saturation- 60% ஆக குறைத்து உள்ளார். ஆனால் அமெரிக்காவில் இந்த படம் தொலைகாட்சியில் ஒளிபரப்பிய போது நிறைய நேயர்கள் படம் சரியாக தெரியவில்லை என்று சொன்னதற்கு இணங்க TV நிறுவனங்கள் படத்தின் chroma gain- அதிகரித்து வைத்து ஒளிபரப்பினார்கள்.

Blue Lagoon (1980)

Richard என்ற சிறுவனும் Emmeline என்ற சிறுமியும் ஒரு பாய்மர கப்பலில் தென் பசிபிக் கடலில் பயணம் செய்யும்போது அந்த கப்பலில் தீடீரென தீ பிடிக்கிறது. Richard -ன் தந்தை Arthur-ம் சிலரும் ஒரு படகில் தப்பிக்க, அந்த கப்பலின் சமையல்காரர் Paddy Button குழந்தைகள் Richard மற்றும் Emmeline னுடன் ஒரு படகில் தப்பிக்கிறார்கள். புகை மூட்டத்தால் திசை மாறி கடலில் தத்தளிதுக்கொண்டிருக்கிரர்கள். அப்போது உடைந்த கப்பலில் இருந்து சிதறிய சில பொருட்களை எடுத்துவைத்துக்கொள்கிரர்கள். மறுநாள் அவர்கள் ஒரு ஆளில்லாத சிறு தீவில் இறங்குகிறார்கள்.

நீல நிறத்தில் ஆழம் குறைவான, பவழ பாறைகள் நிறைந்த கடல் சூழ்ந்த அந்த தீவில் வெண் பரப்பாய் சுத்தமான கடற்கரை, அழகான சோலை நிறைந்த குன்று என்று இயற்கையின் அழகில் மயங்கி போய் சிறுவனும் சிறுமியும் விளையாடுகிறார்கள். தனிமையான அந்த தீவில் வசிப்பதற்கு தேவையான விஷயங்களை Paddy அந்த குழந்தைகளுக்கு சொல்லித்தருகிறார். அப்போது அந்த தீவில் கிடைக்கும் ஒரு பழத்தை குழந்தைகள் பறிப்பதை பார்த்த Paddy அந்த பழத்தை சாப்பிடகூடாது என்று சொல்கிறார். அந்த பழத்தை saap
அந்த பெரியவர் திடீரென்று ஒரு நாள் இறந்து விட, குழந்தைகள் இருவரும் அந்த இயற்கை சூழலிலே உண்டு உறங்கி வாழ பழகிகொள்கிரர்கள். வருடங்கள் செல்ல....பிள்ளைகள் Richard and Emmeline வளர்ந்து teen age பருவத்தில் இருக்கும்போது நடக்கும் மோதல், சந்தேகம், சிநேகம், காதல் என்று சுவாரசியமாக போகிறது.
இருவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தைக்கு எப்படி உணவு ஊட்டுவது என்று தெரியாமல் திண்டாடுவதும் பின்பு கற்றுகொள்வதும் interesting.
Climax-இல் Richard-இன் தந்தை தேடி கண்டு பிடிக்கிறார்.

Cast: Brooke Shields, Christopher Atkins
Directed by Randal Kleiser

The Pursuit of Happiness (2006)
 
 Christopher Gardner என்ற ஒரு சேல்ஸ் மேன் பற்றிய உண்மை கதை.
Will smith நாம் action படங்களில் பார்த்து விட்டு இந்த படத்தில் வித்தியாசமான roleஇல் பார்க்கிறோம்.

1981 வருடம் San Francisco வில் நடக்கிறது கதை.
Chris Gardner கஷ்ட ஜீவனம் செய்யும் ஒரு sales man. இனி உன்னுடன் வாழ முடியாது என்று சொல்லிவிட்டு அவருடைய மனைவி சென்றுவிடுகிறாள். போகும் போது Chri Gardner ருடைய கணக்கில் உள்ள பணம் அத்தனையும் எடுத்து சென்றுவிடுகிறாள்.
ஆரம்ப பள்ளி செல்லும் தன் மகனுடன் வீடு இன்றி தவிக்கிறார் . ஒரு சமயம் வீடு இல்லாமல் தன் மகனுடன் இரவில் ஒரு கழிவறையில் தங்குகிறார்.

Stock Broker வேலைக்காக விண்ணப்பம் செய்து ஆறு மாதம் trainee யாக வேலை செய்கிறார். ஆறுமாத கடைசியில் ஒரே ஒரு நபர் மட்டும் வேலையில் சேர்த்துகொள்ள படுவார்கள் என்ற நிபந்தனையில் கடுமையாக உழைக்கிறார். எதிர் நீச்சல் போட்டு வாழ்க்கையில் ஜெயிக்கிறார். ஆறு மாத training முடிந்து கடைசி நாள் அவருடைய மேலதிகாரிகள் கூப்பிட்டு வேலையில் எப்போது சேர போகிறாய் என்று கேட்கும் போது Will Smithன் expressions அபாரம்.
Direction: Gabriele Muccino.

Gos Must Be Crazy

ஆப்பிரிக்காவில் உள்ள Kalahari பாலைவனத்தில் வசிக்கும் sho (Bushmen) ஆதிவாசி Xixo. பாலைவனத்தை ஒட்டிய ஒரு ஊரில் Teacher வேலைக்காக வரும் Kate Thompson. காட்டு மிருகங்களை ஆராய்ச்சி செய்யும் Andrew Steyn என்ற Biologist. மூன்றாவதாக ஒரு தீவிரவாத புரட்சி குழு மற்றும் அவர்களது தலைவன் Sam Boga. படத்தில் இந்த மூன்று பேரை கொண்ட நிகழ்வுகள் கடைசியில் ஒரு இடத்தில கூடுகிறது.

Bushmen ஆதிவாசிகள் உண்மையில் வெளிஉலகத்தை காணாத பழங்குடிகள். இன்றும் Kalahari பாலைவனத்தில் இவர்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கிறார்கள். வானத்தில் பறக்கும் ஒரு சிறு விமானத்தில் இருந்து ஒரு coca cola பாட்டில் பாலைவனத்தில் விழுகிறது. நாகரீக உலகின் எந்த பொருளையும் கண்டிராத Bushmen ஆதிவாசி Xixo அந்த பாட்டிலை ஆச்சிரியமாக பார்த்து தன் மக்களிடம் போய் கொடுக்கிறார். அந்த பாட்டில் ஆதிவாசி மக்களின் all-in-all பொருளாக ஆகிவிடுகிறது. ஒரு coca cola பாட்டிலை எவ்வளவு use பண்ண முடியுமோ அவ்வளவு use பண்றாங்க. இப்போது அந்த பாட்டில் இல்லாமல் எந்த வேலையும் செய்யமுடியாது என்ற நிலைமை வந்ததும் அவர்களுக்குள் சண்டை வந்துவிடுகிறது. அதனால் ஆதிவாசிகள் கூடி பேசி அந்த பாட்டிலை பாலைவனத்தின் எல்லையில் போட்டுவிட தீர்மானித்து Xixo-வை அனுப்புகிறார்கள்.

ஆசிரியை Kate Thompson- pickup செய்து அழைத்து போக வரும் Andrew Steyn-இன் Land Rover அவரை படுத்தும் பாடு comedy. ஆற்று சேற்றில் சிக்கிக்கொண்ட LandRover மரத்தில் ஏறுவது...! ஹாஸ்யம். இடையில் Landrover car- பார்த்து XiXo மிரள்வதும், Sam Boga -வின் புரட்சி குழு வெட்டியாக ராணுவ புரட்சி செய்வதும் பின்பு தப்பி ஓடுவதும் ஹாஸ்யம்.

கடைசியாக குழு, டீச்செரையும் குழந்தைகளையும் கடத்திக்கொண்டு போவதை அங்காங்கே Andrew-வும் Xixo-வும் முறியடித்து ஜெயம் சொல்கிறார்கள்.
படம் ஆரம்பித்ததும் ஏதோ discovery channel போல இருந்தாலும் கதையை நேர்த்தியாக நகர்த்திஇருக்கிரர்கள்.
Xixo-வாக நடித்திருப்பவர் உண்மையில் Kalahari பாலைவனத்தில் வாழ்ந்த Sho (Bushmen) ஆதிவாசி.
இந்த படத்தின் Director Jamie Uys மூன்று மாதங்கள் தேடி கண்டுபிடித்து நடிக்க வைத்துள்ளார்.